கோலாலம்பூர், ஜன 29 – பழச்சாற்றில் பொட்டாசியம், சுண்ணாம்பு, இரும்புச் சத்து ஆகியவை அதிக அளவு உள்ளது. இந்த பழத்தில் சருமத்தை நல்ல நலத்துடன் வைத்துக்கொள்ளும் சக்தி உண்டு. இது நமது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். மேலும் திராட்சை பழத்தை பயன்படுத்தி சருமத்தை எவ்வாறு பாராமரிக்கலாம் என்பதை பார்க்கலாம்.
• வெள்ளை முகத்தை பெற விரும்பினால், திராட்சை பழச்சாற்றை பிழிந்து எடுத்த பின் மீதம் உள்ள சக்கையை தூக்கி போடாமல் அதை முகத்தில் பசையைப் போன்று பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவ வேண்டும்..
• இப்பழச் சாற்றில் சூரிய வெப்பத்திலிருந்து தாக்கக் சூடிய சரும பாதிப்புக்கள் மற்றும் கதிர்களிடமிருந்தும் வெப்பத்தினால் வரும் கட்டியிலிருந்து பாதுகாப்பு தன்மை உள்ளது. திராட்சை சாறு இயற்கையாவே சருமப் பிரச்சனைகளை வர விடாமல் தடுக்கும் சக்தி கொண்டது. பொதுவாக வெயில் காலத்தில் தினமும் ஒரு குவளை திராட்சை சாறு அருந்துவது சிறந்தது.
• திராட்சை பழச்சாறு இறந்த தோலை நீக்குவதில் உதவக் கூடியதாகும். இதை நீங்கள் சருமத்தில் போட்டால் போதும். உடனடியாக தோல் உரிய ஆரம்பித்து விடும். இவை இறந்த திசுக்களை நீக்கி சுறுக்கங்கள் அற்று இயற்கையாக காணப்படும். நல்ல இரத்த ஓட்டத்தின் காரணமாக சருமத்தின் நீட்சித்தன்மையையும் திராட்சை அதிகரிக்கின்றது. நீர் பதத்தை சருமத்திற்கு கொடுக்கும் போது திராட்சை சாறு ஈரப்பதத்தை சருமத்திற்கு இயற்கையாக அளிக்கின்றது.
• ஒரு மேசை கரண்டி திராட்சை சாற்றை எடுத்து முகத்தில் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவிவிட வேண்டும். இதனால் உங்கள் சருமம் ஈரப்பதத்துடன் காணப்படும். இதனை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
• கண்களுக்கு கீழே உள்ள கருவளையம் மறைய திராட்சையை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இந்த வழியை பயன்படுத்தி கண்களை சுற்றி உள்ள பகுதியில் கருவளையங்கள் வர விடாமல் தடுக்க முடியும்.