Home நாடு காஜாங் இடைத்தேர்தல் ‘தனி மனித ஆர்வம்’ – நஜிப்

காஜாங் இடைத்தேர்தல் ‘தனி மனித ஆர்வம்’ – நஜிப்

713
0
SHARE
Ad

Najib-300-x-200கோலாலம்பூர், ஜன 30 – காஜாங் இடைத்தேர்தல் குறித்து தனது டிவிட்டர் வலைத்தளத்தில் கருத்துரைத்த பிரதமர் நஜிப் துன் ரசாக், இது ஒரு ‘தனி மனிதரின் ஆர்வம்’ என்று கூறியுள்ளார்.

யார் அந்த ‘தனி மனிதர்’ என்பதை அவர் குறிப்பிடவில்லை.

நஜிப் தனது டிவிட்டரில் கூறியிருப்பதாவது, “காஜாங் இடைத்தேர்தல் மக்களுக்காக என்பதை விட ஒரு தனி மனிதரின் ஆர்வத்தால் உருவாக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த திங்கட்கிழமை காஜாங் சட்டமன்ற உறுப்பினர் லீ சின் செ தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அத்தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அன்வார் இப்ராகிம் போட்டியிடுவார் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ அப்துல் காலிட் இப்ராகிம் நேற்று முன்தினம் அறிவித்தார்.