Home இந்தியா ”திமுக – தேமுதிக கூட்டணி அமைந்தால் திருச்சி மாநாட்டிற்கு அழைப்போம்” – ஸ்டாலின்

”திமுக – தேமுதிக கூட்டணி அமைந்தால் திருச்சி மாநாட்டிற்கு அழைப்போம்” – ஸ்டாலின்

609
0
SHARE
Ad

stalinசென்னை, பிப் 5 – திமுக கூட்டணியுடன், தேமுதிக கட்சி இணைவதாக இருந்தால், அவர்களை திருச்சி மாநாட்டிற்கு அழைப்போம் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திருச்சியில், வரும், 15, 16ம் தேதிகளில் நடைபெறவுள்ள, தி.மு.க., மாநாட்டிற்கான ஏற்பாடுகள், சிறப்பாக நடந்து வருகின்றன. லோக்சபா தேர்தலுக்கு முன், நடைபெறும். இந்த மாநாடு, முக்கியத்துவம் வாய்ந்த திருப்பு முனை மாநாடாக அமையும். முந்தைய, தி.மு.க., அரசின் சாதனைகளை விளக்கி, தமிழகம் முழுவதும், துண்டு பிரசுரங்கள், இளைஞரணி சார்பில் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.தி.மு.க., கூட்டணியில், எந்தெந்த கட்சிகளில் இடம் பெறும் என்பதை, தி.மு.க., தலைவர் அறிவிப்பார். தி.மு.க., மாநாட்டிற்கு, கூட்டணிக் கட்சி தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., சேர்ந்தால், அவர்களையும் அழைப்போம்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

#TamilSchoolmychoice