Home கலை உலகம் ஏவோன் நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக நடிகை அசின்

ஏவோன் நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக நடிகை அசின்

626
0
SHARE
Ad

asin avon

புது டெல்லி, பிப் 5- அமெரிக்காவில் பிரபலமான அழகு சாதனை பொருட்களை தயாரிக்கும் நிறுவனமான ஏவோன் நிறுவனம், தனது தயாரிப்புகளை இந்தியாவில் பிரபலப்படுத்தும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து தனது தயாரிப்புகளுக்கான இந்தியாவின் விளம்பரத் தூதுவராக நடிகை அசினை இந்நிறுவனம் நியமனம் செய்துள்ளது. இதற்கான விழா நேற்று புதுடெல்லியில் நடந்தது.

இதில் நடிகை அசின் ஏவோன் நிறுவனத்தின் புதிய அழகு சாதன பொருட்களை அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் விளம்பர தூதுவராகவும் பதவியேற்றுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

விழாவில் பேசிய அசின், ஒரு படத்தில் நடிக்க ஏற்படும் காலஅவகாசத்தைவிட அந்த படத்தின் தனித்தன்மையையே நான் அதிகம் விரும்புகிறேன். அதேபோல், சிறந்த கதையாக இருந்தால் யாருடனும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.

தொடர்ந்து விழாவில் ஏவோனின் இந்திய மேலாளர் உஜ்வா முக்கோபாத்யா பேசும்போது, நடிகை அசின் சிறந்த பெண்மணிக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார். வெளிப்புறத் தோற்றத்தில் மட்டும் அவர் அழகானவர் கிடையாது. மனதளவிலும் அவர் அழகானவர். அதனாலேயே எங்கள் நிறுவனத்தின் தேர்வாக அவர் இருக்கிறார் என்று கூறினார்.