Home நாடு மந்திரி பெசார் ஆகும் எண்ணம் உள்ளது – அன்வார் ஒப்புதல்

மந்திரி பெசார் ஆகும் எண்ணம் உள்ளது – அன்வார் ஒப்புதல்

654
0
SHARE
Ad

Selangor-Khalid-Anwar-300x202பெட்டாலிங் ஜெயா, பிப் 8 – காஜாங் இடைத்தேர்தலில் வெற்றியடைந்தால், டான்ஸ்ரீ காலிட் இப்ராகிமுக்குப் பதிலாக சிலாங்கூர் மந்திரி பெசாராக தான் பதவி ஏற்கும் முடிவில் இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கோடி காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு அண்மையில் வெளியிட்டுள்ள கருத்தில், தான் மந்திரி பெசாராக ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்றும், இது குறித்து பக்காத்தான் தலைவர்களுடன் கலந்துரையாட வேண்டும் என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மந்திரி பெசார் பதவி யாருக்கும் நிரந்தரமல்ல என்று குறிப்பிட்ட அன்வார், அப்பதவி நிரந்தரமானது என்று தான் யாருக்கும் உறுதிமொழி கொடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

‘ஒருவேளை’ நான் மந்திரி பெசார் ஆனால் என்று அழுத்தந்திருத்தமாகக் கூறிய அன்வார், அது தான் பிரதமராகும் வரை நீடிக்கும் என்று தெரிவித்தார்.

ஒவ்வொரு வாரமும் சிலாங்கூரில் ஏதாவது பிரச்சனை வந்து கொண்டிருப்பதைத் தான் விரும்பவில்லை என்றும், அவர்(காலிட்) விலகித் தான் ஆக வேண்டும். அது சோகம் தான் என்றும் கூறினார்.