Home நாடு பிகேஆரின் அதிகாரப்பூர்வ தலைவராக விரும்பும் அன்வார்!

பிகேஆரின் அதிகாரப்பூர்வ தலைவராக விரும்பும் அன்வார்!

446
0
SHARE
Ad

anwarபெட்டாலிங் ஜெயா, பிப் 8 – பிகேஆர் கட்சியின் ஆலோசகராக இருந்து வரும் அன்வார் இப்ராகிம், தற்போது அதிகாரப் பூர்வமாக பிகேஆர் கட்சியின் தலைவராக முடிவு செய்துள்ளார்.

காஜாங் இடைத்தேர்தல் முடிந்தவுடன் அதற்கான நடவடிக்கைகளை தான் மேற்கொள்ளப் போவதாகவும், தான் தலைவராவதன் மூலம், கட்சியின் உயர்மட்டத்தில் உள்ள விவகாரங்களை அதிகாரப்பூர்வமாக எதிர்கொள்ள முடியும் என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

பிகேஆர் கட்சியின் நடப்பு தலைவராக இருந்து வரும், தன் மனைவி டத்தோஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் தனது பேரக் குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்க விரும்புவதாகவும், இதை அவரே தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

வரும் மே மாதம் நடைபெறவுள்ள பிகேஆர் கட்சித் தேர்தலில் தான் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அன்வார் கூறியுள்ளார்.

இதற்கான இறுதி முடிவை காஜாங் இடைத்தேர்தலுக்குப் பின்னர் அறிவிப்பதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.