Home கலை உலகம் இஸ்லாமைத் தழுவினார் யுவன் சங்கர் ராஜா!

இஸ்லாமைத் தழுவினார் யுவன் சங்கர் ராஜா!

1632
0
SHARE
Ad

4152_Twitterசென்னை, பிப் 10 – இசைஞானி இளையராஜாவின் மகனும், பிரபல இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா தான் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளதாக தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

குர்-ஆனில் ஏற்பட்ட நாட்டம் காரணமாக, இஸ்லாம் மார்க்கத்தில் ஈர்ப்பு ஏற்பட்டு இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இது குறித்து யுவன் கூறியிருப்பதாவது, “நான் 3 ஆவது முறையாக திருமணம் செய்து கொள்ளவில்லை. அது போலியான தகவல். ஆமாம் ..நான் இஸ்லாத்தை பின்பற்றுகின்றேன். இதனால் நான் பெருமை அடைகின்றேன். எனது முடிவிற்கு எனது குடும்பமும் ஆதரவளிக்கின்றது. எனது தந்தைக்கும் எனக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இல்லை.அல்ஹம்துலில்லாஹ்.” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice