புத்ராஜெயா, பிப் 11 – சட்டத்தை மதிக்காத எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஒரு சிறந்த தலைவராக இருக்க தகுதியற்றவர் என்று முன்னாள் பிரதமரான துன் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.
அன்வார் தனது அரசியல் பேச்சுக்கள் அனைத்திலும், தன் மீதுள்ள வழக்குகள் குறித்தே பேசி வருகிறார் என்றும், காஜாங்கில் இடைத்தேர்தலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பிகேஆர் செய்த அதிரடி அரசியல் விளையாட்டால் அங்குள்ள மக்கள் எரிச்சலடைந்துள்ளனர் என்றும் மகாதீர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், சட்டத்தை மதிப்பவர்களே உண்மையான தலைவர்கள். ஆனால் சட்டத்தை மதிக்காத அன்வார் இப்ராகிம் எப்படி நல்ல தலைவராக இருக்க முடியும் என்றும் மகாதீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அன்வார் போன்றவர்கள் தலைவரானால் நாட்டில் அமைதி நிலவாது. சீரழிந்துவிடும் என்றும் மகாதீர் கடுமையாக விமர்சித்துள்ளார்.