இரண்டாவது மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு, அம்மாவின் மரணம் போன்ற சம்பவங்களால் மனக்குழப்பத்தில் இருந்த யுவன், இம்முடிவை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.
ஏற்கனவே தனது நீண்ட கால தோழியான சுஜாயா என்ற பெண்ணை திருமணம் செய்த யுவன், பின்னர் விவாகரத்து பெற்று, ஷில்பா என்ற பெண்ணை மணந்தார். தற்போது அந்த திருமண உறவிலும் விரிசல் ஏற்பட்டு அந்த பெண் தன் அம்மாவுடன் லண்டன் சென்று விட்டதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், சிங்கப்பூரோ அல்லது மலேசியாவையோ சேர்ந்த மிகப் பெரிய செல்வந்தர் வீட்டு இஸ்லாம் பெண் ஒருவரை யுவனுக்கு பிடித்துப் போக, அவரை திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் தான் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கடந்த சில மாதங்களாகவே யுவன் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றி வருகிறார் என்று கூறப்பட்டு வந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் வலைத்தளத்தில், ‘ஆம் நான் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகின்றேன்’ என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.