Home தொழில் நுட்பம் ஐ.ஓ.எஸ் 7 – 80 சதவீத ஆப்பிள் நிறுவனக் கருவிகளில் இடம் பெற்றுள்ளது

ஐ.ஓ.எஸ் 7 – 80 சதவீத ஆப்பிள் நிறுவனக் கருவிகளில் இடம் பெற்றுள்ளது

528
0
SHARE
Ad

iOS-7பிப்ரவரி 12 – அண்மையில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஐஓஎஸ் 7 இயங்குதளம் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் மற்றும் ஐ-பேட் போன்ற 80 சதவீத கருவிகளில் இடம் பிடித்துள்ளது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இதன் மூலம் தனது போட்டி இயங்கு தளமான அண்ட்ரோய்ட்டை விட அதிகமான கையடக்கக் கருவிகளில் தனது அண்மைய அறிமுகமான ஐஓஎஸ் 7 இடம் பிடித்துள்ளதை ஆப்பிள் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

ஒப்பீடாகப் பார்க்கையில், அண்ட்ரோய்ட்டின் ஆகக் கடைசியான இயங்கு தளப் படைப்பான 4.4 கிட்கேட் அண்ட்ரோய்ட்டின் 1.5 சதவீத கருவிகளில் மட்டுமே இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பர் வரை ஐஓஎஸ் 7 இயங்குதளம் 78 சதவீத கருவிகளில் இடம் பிடித்திருந்தது. தற்போது ஐஓஎஸ் 7, ஐபோன் 5எஸ், 5 சி, 4எஸ், 4 போன்றவற்றிலும், ஐபேட் 2, ஐபேட் மினி முதலான எல்லா ஐபேட் தட்டைக் கணினிகளிலும் பதிவிறக்கம் செய்யப்பட்டு இயங்கி வருகின்றது.

அண்ட்ரோய்ட் இயங்குதளங்களில் ஏறத்தாழ 60 சதவீத கருவிகளில் இடம் பிடித்து அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருவது 4.3 ஜெல்லி பீன் எனப்படும் இயங்கு தளமாகும்.