Home தொழில் நுட்பம் ஆப்பிள் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஐஓஎஸ் 7.1 வெளியீடு.

ஆப்பிள் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ஐஓஎஸ் 7.1 வெளியீடு.

601
0
SHARE
Ad

iOS-7-teaser-iPhone-5s-ad-003-1024x575மார்ச் 11 – கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் கையடக்கக் கருவிகளுக்கான மென்பொருளான ஐஓஎஸ் 7 தற்போது மேம்படுத்தப்பட்டு, அதிலுள்ள சில குறைபாடுகள் சரி செய்யப்பட்டு, ஐஓஎஸ் 7.1 என்ற பதிப்பாக தற்போது பயனர்களுக்காக பதிவிறக்கம் செய்யப்பட நேற்று திங்கட்கிழமை முதல் தயார் நிலையில் இருக்கின்றது.

#TamilSchoolmychoice

இதற்கான அறிவிப்புகளை ஆப்பிள் நிறுவனம்  அடுத்த சில நாட்களில் ஐ-போன் மற்றும் ஐ-பேட் கருவிகளின் ஊடாக பயனர்களுக்கு குறுந்தகவல் செய்தியாக அனுப்பும் என்றாலும், விரும்புபவர்கள் தற்போது இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த புதிய ஐஓஎஸ் 7.1 பதிப்பைப் பெற விரும்புபவர்கள் தங்களின் கையடக்கக் கருவிகளில் உள்ள Settings > General > Software Update என்ற பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து இயக்குவதன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த புதுப்பிக்கப்பட்ட ஐஓஎஸ் 7.1 பதிப்பு 268 மெகா பைட்(megabytes) கொள் அளவைக் கொண்டிருந்தாலும் இதனைப் பதிவிறக்கம் செய்ய கையடக்கக் கருவிகளில் 2.5 கிகா பைட் (gigabytes) கொள் அளவு இட வசதி இருக்க வேண்டும்.

ஐஓஎஸ் 7 வெளியிடப்பட்டு, அதில் இருந்த சில குறைபாடுகள் குறித்து  பயனர்களிடமிருந்து இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த புதிய பதிப்பு மேம்படுத்தப்பட்டிருக்கின்றது.

சில ஐபோன்களின் திரைகள் திடீரென்று செயல்பாடு இழந்து தானாகவே மூடிக் கொள்ளும் பிரச்சனையை ஐஓஎஸ் 7 கொண்டிருந்தது. தற்போது இது சரி செய்யப்பட்டு அது மேலும் திடமானதாக மேம்படுத்தப்பட்டிருக்கின்றது.

5எஸ் ஐபோன்களின் புதிய தொழில் நுட்ப அம்சமாக அறிமுகப்படுத்தப்பட்ட கைவிரல் ரேகை பதிவு உணர்வு அம்சத்திலும் சில குறைபாடுகளை பயனர்கள் தெரிவித்திருந்தனர். அதுவும் தற்போது ஐஓஎஸ் 7.1 பதிப்பில் சரி செய்யப்பட்டு தற்போது மேலும் துரிதமாக அந்த அம்சம் செயல்படும் எனவும் ஆப்பிள் நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர்.