Home இந்தியா நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு !

நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு !

477
0
SHARE
Ad

34568_L_karunanidhi-stalinசென்னை, மார்ச் 11 – தமிழகம் மற்றும் புதுவையிலுள்ள 35 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டார். தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 24-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டன.

மீதமுள்ள 35 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டார். அதில், நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், தயாநிதிமாறன், ஜெகத்ரட்சகன், தாமரைச்செல்வன், காந்திசெல்வன், ராசா, டி.ஆர்.பாலு, ஏ.கே.எஸ்.விஜயன் ஆகிய 8 பேருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அவர்களில், டி.கே.எஸ்.இளங்கோவன், டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் ஆகியோர் தொகுதி மாறி போட்டியிடுகின்றனர்.

மேலும், சேலம் வேட்பாளர் உமாராணி, ஈரோடு வேட்பாளர் பவித்ரவள்ளி ஆகிய 2 பெண்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. 35 வேட்பாளர்களில் 13 பேர் வக்கீல்கள்.

மருத்துவர்கள் 3 பேர், பொறியியலாளர் ஒருவர், முதுகலை பட்டதாரிகள் 8 பேர், இளங்கலை பட்டதாரிகள் 7 பேர் போட்டியிடுகின்றனர். 27 பேர் முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இந்தப் பட்டியல் முற்றிலும் முழுமையானது என்று சொல்ல மாட்டேன். ஒன்றிரண்டு திருத்தங்கள் வரக் கூடும். வந்தால், தலைமைக் கழகம் சார்பில், திருத்தங்களை வெளியிட்டு, அது இந்தப் பட்டியலில் இணைக்கக் கூடும்’ என்றார்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. இதனால், திமுகவும், அதிமுகவும் 35 தொகுதிகளில் நேரடியாக மோதும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியான நிலையில் உள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் ஆகியவை தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. ஆனாலும் அவர்கள் இன்னும் இறுதியான முடிவை எடுக்கவில்லை. ஆனால் திமுக, அதிமுக ஆகிய இரு முக்கிய கட்சிகள் வேட்பாளரை அறிவித்து விட்டதால், தமிழக அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கிள்ளது.