Home இந்தியா காங்கிரஸ் தொண்டர்கள் கடும் மன வருத்தத்திலுள்ளனர்- மத்திய அமைச்சர் வாசன்!

காங்கிரஸ் தொண்டர்கள் கடும் மன வருத்தத்திலுள்ளனர்- மத்திய அமைச்சர் வாசன்!

534
0
SHARE
Ad

GK_vasan_0சென்னை, மார்ச் 11 – நாடாளுமன்றத் தேர்தல் குறித்த, அனைத்து ஏற்பாடுகளையும், டில்லி மேலிடமே மேற்கொள்கிறது. அவற்றை, விரைந்து செய்யாமல், தாமதமாக செய்வதால், தமிழகத்தில், காங்கிரஸ் தொண்டர்கள் கடும் மன வருத்தத்திலுள்ளனர்,” என, மத்திய அமைச்சர், வாசன் கூறினார்.

பிரதமர், மன்மோகன் சிங்கை, அவரது இல்லத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, அமைச்சர் வாசன், நேற்று, சந்தித்து பேசினார். பின், நிருபர்களிடம், அவர் கூறியதாவது, இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமை ஆணையம் சார்பில்  கொண்டு வரப்படும் தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டும் என, பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன்.

தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் துன்புறுத்தப்படுவது குறித்து, இலங்கை அரசிடம் பேசி, உரிய தீர்வை, ஏற்படுத்த வேண்டுமென்று வலியுறுத்தினேன். நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், தேர்தலை சந்திக்க, தமிழக காங்கிரசுக்கு, போதிய அறிவுறுத்தல்களோ, வழிகாட்டுதல்களோ இல்லை.

#TamilSchoolmychoice

கூட்டணி தொடர்பான, அனைத்து நடவடிக்கைகளையும், காங்கிரஸ் மேலிடமே மேற்கொண்டு வருகிறது. தமிழக, காங்கிரஸ் தலைவர்களுக்கு, எந்த தகவலும் தெரியவில்லை. இதனால், தமிழகத்தில், தேர்தல் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை, காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது. இது, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளையும், தொண்டர்களையும், கடும் மன வருத்தத்திலும், அதிருப்தியிலும் ஆழ்த்தியுள்ளது என  வாசன்  கூறினார்.