Home இந்தியா தாஜ்மஹால் நீக்கம் – ஜி.கே வாசன் கண்டனம்!

தாஜ்மஹால் நீக்கம் – ஜி.கே வாசன் கண்டனம்!

1163
0
SHARE
Ad

g.k.vasanசென்னை – உத்தரப் பிரதேச அரசு தாஜ்மஹாலை சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இருந்து நீக்கியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியிருக்கிறார்.

“நாட்டில் மதநல்லிணக்கத்தை நிலை நாட்டி, மக்களை அரவணைத்துச் செல்ல வேண்டிய அரசு, இவ்வாறு உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாகப் போற்றப்படும் இந்தியாவின் தாஜ்மஹாலை சுற்றுலாத்தலங்களின் பட்டியலில் இருந்து நீக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.”

“கட்டிடக்கலைக்கும், கலை நுணுக்கத்திற்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகக் கருதப்படுவது தாஜ்மஹால் தான். இந்தியாவில் பல்வேறு சாதி, மத, இன, மொழி இருந்தாலும் அனைத்து தரப்பினரும் விரும்பி சென்று பார்க்கக்கூடிய சுற்றுலாத்தலமாக தாஜ்மகால் அமைந்திருக்கிறது.”

#TamilSchoolmychoice

“ஆண்டுதோறும் சுமார் 60 லட்சத்திற்கு மேற்பட்ட வெளிநாட்டினர் தாஜ்மஹாலைக் காண இந்தியாவுக்கு வருகை புரிகின்றனர். இதனால் உத்திரபிரதேச மாநில அரசு அதிக அளவு வருவாய் ஈட்டுகின்றது. அப்படியிருந்தும் தாஜ்மஹாலை சுற்றுலாத்தலங்களின் பட்டியலில் இருந்து நீக்கியிருப்பது வருத்தம் அளிக்கிறது” என்று ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.