Home கலை உலகம் ஓவியா ரசிகர்களுக்கு மகிழ்ச்சி – ஆரவ் அதிரடி அறிவிப்பு!

ஓவியா ரசிகர்களுக்கு மகிழ்ச்சி – ஆரவ் அதிரடி அறிவிப்பு!

1401
0
SHARE
Ad

oviya-aarav-mainசென்னை – பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களால் மிகவும் விரும்பப்பட்ட போட்டியாளரான ஓவியாவைக், காதலிக்க மறுத்த மற்றொரு போட்டியாளரான ஆரவ், மீது மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருந்து வந்தனர்.

ஆனால், ஓவியா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர், ஆரவ் மீதிருந்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாக மக்களுக்குத் தணியத் தொடங்கியது.

இந்நிலையில், கடந்த வார சனிக்கிழமை, மக்களின் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்ற ஆரவ் ‘பிக்பாஸ்’ வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு 50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், ஆரவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தான் திரைப்படங்களில் நடித்து சிறந்த நடிகர் என்ற பெயரை அடைய வேண்டும் என்று விரும்புவதாகத் தெரிவித்தார்.

மேலும், ஓவியாவும், தானும் இப்போதும் நல்ல நண்பர்கள் என்றும், மக்கள் தாங்கள் இருவரையும் திரையில் ஒன்றாகப் பார்க்க விரும்பினால் ஓவியாவுடன் இணைந்து நடிக்கத் தயார் என்றும் தெரிவித்திருக்கிறார்.