Home கலை உலகம் பிக் பாஸ்: ஆரவ் வெற்றியாளரானார்!

பிக் பாஸ்: ஆரவ் வெற்றியாளரானார்!

1507
0
SHARE
Ad

arav-big boss-participantசென்னை – ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறி வந்த – உலகம் எங்கும் உள்ள தமிழ் இரசிகர்களைக் கவர்ந்த பிக் பாஸ் நிகழ்ச்சி – நேற்று சனிக்கிழமை இரவுடன் இனிதே நிறைவடைந்தது.

இறுதிச் சுற்றுக்குத் தேர்வான நான்கு பேர் சிநேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம், ஹரிஷ் ஆகிய நால்வராவார்.

நிகழ்ச்சி நடத்திய கமல்ஹாசன் நிகழ்ச்சியிலிருந்து முதலில் வெளியாகவிருப்பவரை அவரது குடும்பத்தினர் அழைத்து வருவார்கள் என்று அறிவித்தார்.

#TamilSchoolmychoice

அதன்படி கணேஷ் வெங்கட்ராம் முதலில் நிகழ்ச்சியிலிருந்து அவரது மனைவி நிஷாவால் வெளியே அழைத்து வரப்பட்டார். கணேஷ் மூன்றாவது நிலையில் வென்றவராக அறிவிக்கப்பட்டார்.

பின்னர் அடுத்த வெற்றியாளரை அழைத்துவர ஓவியாவை கமல் அழைத்தார்.  அடுத்த நிலை வெற்றியாளரை பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று அழைத்து வருவதுதான் ஓவியாவின் இன்றைய டாஸ்க் அதாவது பணி என்று பிக் பாஸ் கடிதம் மூலம் ஓவியாவிடம் அறிவித்தார்.

அதன்படி வீட்டின் உள்ளே சென்ற ஓவியா அடுத்த வெற்றியாளரான ஹரிஷை வெளியே அழைத்து வந்தார்.

ஆக இறுதியில் எஞ்சியிருந்த 2 வெற்றியாளர்கள் சிநேகனும், ஆரவ்வும் ஆவர்.

அவர்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதியில் வென்றவர், இரசிகர்களால் அதிக வாக்குகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆரவ் என கமல் அறிவித்தார்.

மலேசிய நேரப்படி அதிகாலை 3.00 மணியளவில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு முடிவுக்கு வந்தது.