Home கலை உலகம் பிக் பாஸ் : “இந்தியன் 2” எடுக்கப்படும்; கமல் முன்னிலையில் ஷங்கர் அறிவிப்பு!

பிக் பாஸ் : “இந்தியன் 2” எடுக்கப்படும்; கமல் முன்னிலையில் ஷங்கர் அறிவிப்பு!

1105
0
SHARE
Ad

indian 2-bigg-boss-kamal-shankar-சென்னை – நேற்று சனிக்கிழமை இரவு (30 செப்டம்பர் 2017) ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிய பிக் பாஸ் நிகழ்ச்சியில், எதிர்பாராத திருப்பு முனையாக, இயக்குநர் ஷங்கர் மேடையேறினார். அவர் ஓர் அறிவிப்பைச் செய்வார் என கமல்ஹாசன் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து மேடைக்கு வந்த ஷங்கர், படத் தயாரிப்பாளர் தில் ராஜூவை மேடைக்கு அழைத்தார். அப்போது மேடையில் அனைவரும் இருக்க எந்திரன் 2.0 படத்துக்குப் பிறகு இந்தியன் 2 படத்தை எடுக்கப் போவதாக ஷங்கர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

மூன்றாண்டுகளுக்கு முன்பே இந்தியன் 2 படத்தை எடுக்கத் திட்டமிட்டதாகவும், எனினும் கதை சரியாக அமையவில்லை என்பதால், மற்ற பட வேலைகளில் மூழ்கி விட்டதாகவும் ஷங்கர் மேடையில் கூறினார்.

#TamilSchoolmychoice

“எனினும் தற்போது ஒரு நல்ல கதைக்கான கரு கிடைத்து விட்டதால் அடுத்து இந்தியன் 2 படம் எடுக்கப் போகிறோம்” என பலத்த கரவொலிகளுக்கிடையே ஷங்கர் அறிவித்தார்.

“எனது பிக் பாஸ் குடும்பத்தினர் முன்னிலையில், இத்தனை கோடி இரசிகர்கள் தொலைக்காட்சி வழி பார்த்துக் கொண்டிருக்க, எனது புதிய படத்தின் ஆரம்ப விழா நடைபெறுகிறது. இதுபோன்று எனது எந்தப் படத்தின் ஆரம்ப விழாவும் நடைபெற்றதில்லை” என கமல்ஹாசன் ஷங்கருக்குப் பின்னர் பேசும்போது கூறினார்.

இதனைத் தொடர்ந்து இந்தியன் 2 குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு உறுதியாகிவிட்டது.