Home கலை உலகம் பிக் பாஸ்: மீண்டும் வீட்டுக்குள் வந்த ஓவியா உள்ளிட்ட பங்கேற்பாளர்கள்

பிக் பாஸ்: மீண்டும் வீட்டுக்குள் வந்த ஓவியா உள்ளிட்ட பங்கேற்பாளர்கள்

841
0
SHARE
Ad

Bigboss-Bannerசென்னை – கடந்த 100 நாட்களாக ஸ்டார் விஜய் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளியேறி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று சனிக்கிழமையுடன் ஒரு நிறைவை நாடுகிறது.

இதனை முன்னிட்டு, இந்த நிகழ்ச்சியில் இதுவரை பங்கேற்ற பங்கேற்பாளர்கள் இன்று ஒன்றுகூடி மீண்டும் பிக் பாஸ் இல்லத்தில் நுழைந்தனர்.

இன்றைய நிகழ்ச்சியின் சில சுவாரசியமான அம்சங்கள்:

  • நிகழ்ச்சியை நடத்தும் கமல்ஹாசன் பட்டு வேட்டி, கறுப்புச் சட்டை அணிந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
  • நிகழ்ச்சி குறித்து பொதுமக்களும், பல நடிகர்களும் கூறிய கருத்துகள் காணொளியாக ஒளிபரப்பப்பட்டன.
  • அதை அடுத்து முன்பு பங்கேற்று பின்னர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகர் பரணி, கஞ்சா கருப்பு, வையாபுரி, சக்தி, ஓவியா, சுஜா, அனுயா, காயத்திரி, ஜூலி, ஆர்த்தி ஆகியோர் மீண்டும் பிக் பாஸ் இல்லத்தில் நுழைந்தனர்.
  • பிரிந்தவர்கள் ஒன்று கூடியதும் நிகழ்ச்சி ஒரே கோலாகலமாகவும், உற்சாகம் நிறைந்ததாகவும் மாறியது. அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து நலம் விசாரித்துக் கொண்டனர்.
  • பழையவர்கள் மீண்டும் உள்ளே நுழைய, நடிகை ஓவியாவும், ஆரவ்வும் மீண்டும் சந்தித்துக் கொண்ட ‘வரலாற்றுபூர்வ’ நிகழ்ச்சியையும், தொலைக்காட்சி இரசிகர்கள் கண்டு களித்தனர்.
  • ஓவியா, ஆரவ்வைப் பார்த்து எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டதோடு ‘உங்கள் உடல் எடை மிகவும் குறைந்திருக்கிறது’ என ஆரவ்வைப் பார்த்துக் கூறினார். பின்னர் இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.
  • பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரவ் – ஓவியா இடையில் காதல் முகிழ்த்ததும், ஆரவ், ஓவியாவுக்கு ‘மருத்துவ’ முத்தம் கொடுத்ததும் நிகழ்ச்சியின் உச்சகட்ட பரபரப்பாக அமைந்தது.
  • இன்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளரை கமல்ஹாசன் அறிவிப்பார்.
#TamilSchoolmychoice

-செல்லியல் தொகுப்பு