Home நாடு இந்த ஆண்டு பொதுத் தேர்தல் இல்லை! இன்னொரு அறிகுறி!

இந்த ஆண்டு பொதுத் தேர்தல் இல்லை! இன்னொரு அறிகுறி!

1004
0
SHARE
Ad

najib-umno-general-assembly-2016கோலாலம்பூர் – எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறி வரும் நிலையில், இந்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்கிற ஆர்வம் நாளுக்கு நாள் அனைவருக்கும் குறைந்து கொண்டே வருகிறது.

அடுத்தாண்டுதான் நடைபெறும் என துன் மகாதீர் ஆரூடம் கூறியிருக்கிறார். சபா, சரவாக்கில் தங்களின் செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் தேசிய முன்னணிக்கு தேவைப்படுவதாலும், அதற்குரிய கால அவகாசம் அவர்களுக்குத் தேவைப்படுவதாலும், பொதுத் தேர்தல் அடுத்தாண்டுதான் நடைபெறும் என்கிறார் மகாதீர்.

இதற்கிடையில் இன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அம்னோவின் பொதுப் பேரவை எதிர்வரும் டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெறும் என உறுதிப்படுத்தியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

அம்னோ பொதுப் பேரவை எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என்றாலும், முக்கியமான அந்தப் பேரவை டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெறுவது உறுதி என நஜிப் கூறியுள்ளதால், இந்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறும் வாய்ப்பு குறைவுதான் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.