Home One Line P2 பிக் பாஸ் வெற்றியாளர் ஆரவ், ‘மார்கெட் ராஜா’வாக உருவாகி உள்ளார்!

பிக் பாஸ் வெற்றியாளர் ஆரவ், ‘மார்கெட் ராஜா’வாக உருவாகி உள்ளார்!

897
0
SHARE
Ad

சென்னை: பிக் பாஸ் முதல் சீசனின் வெற்றியாளரான ஆரவ் திரையுலகில் முதல் முறையாக கால் பதித்துள்ளார். புதுமுக நடிகராக ஆரவ் , இயக்குனர் சரண் இயக்கத்தில் உருவான ‘மார்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டக் காணொளி வெளியீட்டு விழா நேற்று செவ்வாய்க்கிழமை சென்னையில் நடந்தது. இப்படக்குழுவினருடன் ராதிகா, சரத்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்

இப்படத்தில் ராதிகா உடன் இணைந்து நடித்ததோடு, ஆரவுக்கு அம்மாவாக அவர் நடித்திருப்பதாக ஆரவ் தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தருமாறு அவர் கோரியுள்ளார்.

#TamilSchoolmychoice

அமர்க்களம் படத்திற்கு நேரெதிரான பாத்திரத்தில் ராதிகா இப்படத்தில் நடித்திருக்கிறார். ஆரவ் இந்தப் படத்தில் இரு வேறு சாயலில் ஒரு தேர்ந்த நடிகர் போல நடித்திப்பதாகக் கூறப்படுகிறது. இயக்குநர் சரண் நடிகர் அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் ஆகிய படங்களை இயக்கியவர். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்படத்தில் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: