கொழும்பு: அண்மையில், இங்குள்ள புத்த கோயிலில், 70 வயதான டிக்கிரி என்ற பெண் யானை எலும்பும் தோலுமாக உடல்நிலை சரியில்லாமல் ஊர்வலத்தில் பங்கேற்க வைக்கப்பட்டுள்ளது குறித்து இலங்கை சுற்றுலா மற்றும் வனவிலங்கு அமைச்சர் ஜான் அமரதுங்கா விசாரிக்க உத்தரவிட்டடிருந்தார்.
சமூக வலைத்தளத்தில் அதிகமான மக்களின் அனுதாபத்தைப் பெற்று, டிக்கிரிக்கு தேவையான உதவிகள் சென்றடைய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆயினும், 70 வயதான அந்த பெண் யானை வயோதிகம் காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கிரைக் காப்பாற்றுவதன் நோக்கில் முன்னதாக, சேவ் எலிபேண்ட் (Save Elephant ) என்ற அறக்கட்டளை கூறுகையில், “டிக்கிரிக்கு உடல் நிலை சரியில்லை. திருவிழா தொடங்கும் போது அதாவது மாலை நேரத்தில் பேரணியில் இணையும் டிக்கிரி நள்ளிரவில்தான் மீண்டும் தன் இடத்திற்குத் திரும்புகிறது. எலும்பும், தோலுமாக உள்ள டிக்கிரியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது, ஆயினும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்களின் கூச்சல், புகை, பட்டாசு போன்றவற்றுக்கு நடுவே அதை அழைத்துச் செல்கின்றனர்.” என்று குறிப்பிட்டிருந்தது.
வயதான காரணத்தினாலேயே டிக்கிரி உயிரிழந்ததாக அதன் உருமையாளர் ட்ரூ தெரிவித்துள்ளார்.