Home One Line P2 விக்கிரவாண்டி, நாங்குநேரியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன!

விக்கிரவாண்டி, நாங்குநேரியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன!

742
0
SHARE
Ad

சென்னை: அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்பாளர்களை ஆளும் கட்சியான அதிமுக அறிவித்துள்ளது.

எம்.ஆர்.முத்தமிழ்செல்வன் மற்றும் வி.நாராயணன் ஆகியோரை தேர்தல் களத்தில் அதிமுக இறக்கி உள்ளது. எம்.ஆர்.முத்தமிழ்செல்வன் விக்கிரவாண்டியில் போட்டியிடும் வேளையில், வி.நாராயணன் நாங்குநேரியில் போட்டியிட உள்ளார்.

துணை முதலமைச்சரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதலமைச்சரும் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியால் கடந்த திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கட்சி மொத்தமாக 90 நபர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்றதாகவும், மற்றும் கடந்த திங்களன்று வேட்பாளர்களை நேர்காணல் செய்ததாகவும் கூறப்படுகிறது.