Home One Line P1 ஜொஹான் செத்தியாவைத் தவிர பிற இடங்களில் மிதமான காற்று மாசுபாடு குறியீடு பதிவிடப்பட்டுள்ளது!

ஜொஹான் செத்தியாவைத் தவிர பிற இடங்களில் மிதமான காற்று மாசுபாடு குறியீடு பதிவிடப்பட்டுள்ளது!

718
0
SHARE
Ad
படம்: நன்றி பெர்னாமா

கோலாலம்பூர்: தீபகற்பத்தில் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகள், சபா மற்றும் சரவாக்கில் காற்று மாசுபாடு குறியீட்டு (ஏபிஐ) அளவு 100-க்கும் குறைவான அல்லது மிதமான அளவில் பதிவாகி உள்ளதாக காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

இன்று காலை 8 மணிக்கு, சமீபத்திய ஏபிஐ வாசிப்பின் அடிப்படையில், 67 பகுதிகள் மிதமான காற்று தரத்தை பதிவு செய்துள்ளன. இதில் ஸ்ரீ அமான், சரவாக் உள்ளிட்டவை கடந்த வெள்ளிக்கிழமை ஆபத்தான அளவீடுகளை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜொஹான் செத்தியா கிள்ளானில் மட்டும் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் காற்றின் தரத்தில் எந்த மாற்றத்தையும் காட்டவில்லை. இன்று காலையும் அதன் காற்று மாசுபாடு குறியீடு 153-ஆக பதிவாகி உள்ளது. அதே நேரத்தில் புத்ராஜெயா, கிள்ளான், சிலாங்கூர் மற்றும் தாசெக், செரி மஞ்சோங்கில் தற்போது மிதமான ஏபிஐ பதிவு செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

நேற்று (செப்டம்பர் 24) முதல் மழைக்காலம் தொடங்கியதைத் தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களாக நாட்டைத் தாக்கிய புகை மூட்டம் மேம்படும் என்று மலேசிய வானிலை ஆய்வு துறை முன்னறிவித்திருந்தது.