Home இந்தியா காஷ்மீரில் திடீர் தாக்குதல்: 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்!

காஷ்மீரில் திடீர் தாக்குதல்: 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்!

847
0
SHARE
Ad

SriNagarattack3102017ஸ்ரீநகர் – காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய விமான நிலையம் அருகே அமைந்திருந்த பாதுகாப்பு முகாமில் இன்று செவ்வாய்க்கிழமை தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

அவர்களை நோக்கி இந்தியப் பாதுகாப்புப் படை நடத்திய பதிலடித் தாக்குதலில் இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்தச் சண்டையில், இந்தியப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் உயிரிழந்தார். 3 அதிகாரிகள் காயமடைந்திருக்கின்றனர் என்று காஷ்மீர் காவல்துறைத் தலைவர் முனீர் கான் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice