ஆக்ரா – உலக அதியங்களில் ஒன்றான தாஜ்மஹாலை மாசுக்களில் இருந்து பாதுகாக்கும் வகையில், வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அதனை தினமும் 3 மணி நேரம் மட்டுமே பொதுமக்கள் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தாஜ்மஹால் அதன் பொலிவை இழந்து வருவதாகவும், மனித மாசுக்களில் இருந்து அதனைப் பாதுகாக்கும் வகையில், பொதுமக்களின் பார்வை நேரத்தைக் குறைக்கும் படியும் இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்ததையடுத்து, இம்முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
ஆக்ரா நதிக்கரையோரம் அழகே உருவாய் அமைந்திருக்கும் காதல் சின்னமான தாஜ்மஹாலை, ஆண்டுக்கு சுமார் 80 லட்சம் பேர் பார்வையிடுவதாக அறிக்கை கூறுகின்றது.
நாள் ஒன்றுக்கு சுமார் 50,000-த்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் தாஜ்மஹாலைப் பார்வையிடுவதாகவும் அறிக்கை கூறுகின்றது.