Home நாடு சீன விண்வெளி நிலையம் மலேசிய வான்பரப்பைக் கடந்தது!

சீன விண்வெளி நிலையம் மலேசிய வான்பரப்பைக் கடந்தது!

841
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சீனாவின் தியாங்கோங் -1 விண்வெளி நிலையம், தற்போது பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் நிலையில், அது இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.19 மணியளவில் மலேசிய வான்பரப்பை 81 வினாடிகளில் கடந்திருப்பதாக தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (அங்காசா) அறிக்கை விடுத்திருக்கிறது.

தியாங்கோங் -1 விண்வெளி நிலையம், சுமார் 90 வினாடிகள் மலேசிய வான்பரப்பைக் கடந்த போது, 182.462 கிலோமீட்டரிலிருந்து 182.407 கிலோமீட்டராக தாழ்வானதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.

மேலும், சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் எதுவும் கிடந்தால் பொதுமக்கள் அதனைத் தொட வேண்டாம் என்றும், அது போன்ற சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் எதையும் கண்டால் 999 என்ற எண்ணிற்கு அழைக்கும்படியும் அங்காசா தெரிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice