Home One Line P2 டிசம்பர் 21-இல் வியாழன், சனி கிரகங்கள் மிக நெருக்கமாக இருக்கும்!

டிசம்பர் 21-இல் வியாழன், சனி கிரகங்கள் மிக நெருக்கமாக இருக்கும்!

667
0
SHARE
Ad

வாஷிங்டன்: வருகிற டிசம்பர் 21- ஆம் தேதி சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகங்களான வியாழன் மற்றும் சனி மிகவும் நெருக்கமாக வரப் போகின்றன.

இது அன்றைய இரவு 8.08 மணியில் இருந்து 9.42 மணி வரை நிகழ்கிறது. உலகின் தென்மேற்கு பகுதியில் இருந்து தெளிவாக காணலாம்.

இதனை கிரகங்களின் மிகப்பெரிய இணைப்பு என்று விண்வெளி அறிஞர்கள் அழைக்கின்றனர்.

#TamilSchoolmychoice

இது 397 ஆண்டுகளுக்கு பிறகு நம்முடைய வாழ்நாளில் நிகழப் போகிறது என்ற தகவல்களையும் தெரிவித்துள்ளனர். சூரியனை சுற்றி வர வியாழன் கிரகத்திற்கு 11.8 ஆண்டுகள் ஆகும். அதுவே, சனி கிரகத்திற்கு 29.5 ஆண்டுகள் ஆகும். இறுதியாக 1623- ஆம் ஆண்டு வியாழன் மற்றும் சனி கிரகங்கள் மிகவும் நெருக்கமாக வந்தன.