கோலாலம்பூர்: பேராக்கில் அம்னோ , நம்பிக்கை கூட்டணிக்கு இடையில் கூட்டணி அமைக்கப்படும் என்ற ஊகங்கள் இருந்தபோதிலும், தற்போதைய அரசாங்கத்தை நிலைநாட்ட தேசிய கூட்டணி அம்னோவுடன் பேச்சுவார்த்தை நடத்த இன்னும் தயாராக இருப்பதாக தெரிகிறது.
முன்னாள் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமுவுக்கு நெருக்கமான வட்டாரங்களின்படி, பேராக்கில் பெர்சாத்து, பாஸ், கெராக்கான், சுயேச்சை உள்ளிட்ட 10 சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில அரசை நிபந்தனையுடன் வழிநடத்த அம்னோவை ஆதரிக்க தயாராக உள்ளததாகக் கூறியுள்ளார்.
” எனக்குத் தெரிந்தவரை எங்கள் பேச்சுவார்த்தைகள் தடைபடவில்லை. ருங்குப் சட்டமன்ற உறுப்பினர் ஷாருல் ஜமான் யஹ்யாவை புதிய மந்திரி பெசராக நியமிக்க வேண்டும். அப்போது அம்னோவுடன் ஒத்துழைக்க தேசிய கூட்டணி கூட்டணி தயாராக உள்ளது. பைசல் அசுமுவை நீக்க நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பின்னணியில் மாநில அம்னோ தலைவர் சரணி முகமட் தான் சூத்திரதாரி என்று நம்புவதால், இந்த முடிவு,” என்று அந்த வட்டாரம் மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் கடந்த சனிக்கிழமையன்று பேராக் ஈப்போவில் விவாதிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
“கலந்துரையாடலில் பாஸ் கட்சியும் உடன் இருந்தது. பொதுவாக, பேராக் தேசிய கூட்டணி அம்னோவை ஆதரிக்க தயாராக ஒரு நிலைப்பாட்டை எடுத்தது. ஷாருல் தான் மந்திர் பெசாராக இருக்க வேண்டும், ” என்று அவர் மேலும் கூறினார்.
இருப்பினும், இந்த நிலை குறித்த சமீபத்திய முன்னேற்றங்கள் தனக்குத் தெரியாது என்று அந்த வட்டாரம் ஒப்புக்கொண்டது.
இதற்கிடையில், அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சரணியை பேராக் மந்திரி பெசார் பதவிக்கு பரிந்துரைத்தனர் என்று ஷாருல் தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
“அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருமே ஒருமித்த கருத்துப்படி அம்னோ தொடர்புக் குழுத் தலைவரான சரணியை பேராக் மந்திரி பெசார் என பரிந்துரைத்துள்ளனர். இனி ஊகங்கள் வேண்டாம்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.