Home நாடு பெர்சே, சுவாராம் அலுவலகங்களில் காவல்துறை விசாரணை!

பெர்சே, சுவாராம் அலுவலகங்களில் காவல்துறை விசாரணை!

1057
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தொகுதிகள் எல்லை சீர்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதைக் கண்டித்து கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தியதற்காக பெர்சே மற்றும் சுவாராம் அலுவலகங்களில் இன்று வெள்ளிக்கிழமை காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

பெர்சே அமைப்பின் இடைக்காலத் தலைவர் ஷாருல் அமான் முகமது சாரியையும், செயல் இயக்குநர் யாப் சீ செங் மற்றும் செயற்குழு உறுப்பினர் மண்டீப் சிங் மற்றும் சுவாராம் ஒருங்கிணைப்பாளர் அமிர் அப்துல் ஹாடி ஆகியோரிடம் காவல்துறை வாக்குமூலம் பெற வேண்டும் என்று கூறியதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், பெர்சே அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அவர்கள் நான்கு பேரும், டாங்கி வாங்கி காவல்துறைத் தலைமையகத்திற்கு வந்து தங்களது வாக்குமூலத்தை அளிக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் கூறிவிட்டுச் சென்றிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice