Home நாடு ஜோகூர் பாருவைக் குறி வைக்கும் எதிர்க்கட்சிகள் – சவாலை எதிர்க்கொள்ள ஷரீர் தயார்!

ஜோகூர் பாருவைக் குறி வைக்கும் எதிர்க்கட்சிகள் – சவாலை எதிர்க்கொள்ள ஷரீர் தயார்!

1034
0
SHARE
Ad

Shahrir Samadஜோகூர் பாரு – முன்னாள் அமைச்சரும், ஜோகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினருமான ஷரீர் அப்துல் சமட், வரும் 14-வது பொதுத்தேர்தலில், தனது தொகுதியைத் தற்காக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறார்.

எதிர்கட்சியைச் சேர்ந்த வலிமையான வேட்பாளர்கள் எவ்வளவு பேர் தனது தொகுதியில் போட்டியிட்டாலும் கூட, தன்னால் தனது தொகுதியைத் தக்க வைக்க முடியும் என்று ஷரீர் குறிப்பிட்டிருக்கிறார்.

“ஆரம்பத்தில், நான் 14-வது பொதுத்தேர்தல் ஒரு எளிய பயணமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அதன் பின்னர் தான் தெரிந்தது ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் அகதுல் சமட் உள்ளிட்ட நிறைய பேர் எனது தொகுதியில் போட்டியிட வருகின்றார்கள். எனவே எல்லோருக்கும் ஜோகூர் மேல் விருப்பம் ஏற்பட்டிருப்பதால், நானும் இந்த விளையாட்டில் எந்த ஒரு சூழலையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்” என்று ஷரீர் சமட் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice