Home நாடு விரைவில் ஒபாமா மலேசியா வருகை!

விரைவில் ஒபாமா மலேசியா வருகை!

893
0
SHARE
Ad

obama-smiling1கோலாலம்பூர், பிப் 14 – எதிர்வரும் ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மலேசியாவிற்கு வருகை புரியவுள்ளார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

ஒபாமாவின் வருகை கடந்த அக்டோபர் மாதமே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் வாஷிங்டனில் நிலவிய உள்நாட்டு அரசியல் நெருக்கடி காரணமாக அவரது வருகை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டிரான்ஸ் பசிபிக் கூட்டு வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ளடங்கிய 12 நாடுகளுடனான உடன்பாடு குறித்த பேச்சு வார்த்தைக்கு அவர் வருவதாக அவரது செய்தி அறிக்கை கூறுகின்றது.

#TamilSchoolmychoice

ஆசிய- பசிபிக் வட்டாரத்தின் கீழுள்ள இந்த நாடுகளின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த அம்சங்களை அதிகரிக்கும் பேச்சு வார்த்தையை நடத்த விருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக்கை சந்திக்கவிருக்கும் ஒபாமா, மலேசியாவின் தற்காப்பு மற்றும் இராணுவம் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

ஒபாமாவின் வருகை ஏப்ரல் மாதம் என்பது உறுதியான நிலையில், எந்த தேதியில் அவர் வருகின்றார் என்பது தெரியவில்லை.