Home உலகம் ஒபாமாவைக் குறை கூறி லண்டன் பயணத்தை இரத்து செய்த டிரம்ப்!

ஒபாமாவைக் குறை கூறி லண்டன் பயணத்தை இரத்து செய்த டிரம்ப்!

1221
0
SHARE
Ad

donald trump(N)வாஷிங்டன் – லண்டனில் 1.2 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டிருக்கும் புதிய அமெரிக்கத் தூதரகக் கட்டிடத் திறப்புவிழாவிற்கு அடுத்த மாதம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், தான் அங்கு செல்லப் போவதில்லை என டிரம்ப் இன்று வெள்ளிக்கிழமை தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

லண்டன் நகரத்தின் நடுவே வசதியாக இருந்த அமெரிக்கத் தூதரகக் கட்டிடத்தை, முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா விற்றது மிக மோசமான முடிவு என டிரம்ப் குற்றம் சாட்டியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

“நான் லண்டன் பயணத்தை இரத்து செய்ததன் காரணம் என்னவென்றால், நான் ஒபாமா தலைமையிலான நிர்வாகத்தின் பெரிய ரசிகனெல்லாம் கிடையாது. குறிப்பாக, புதிய கட்டிடத்தை அதுவும் நகரத்திற்கு வெளியே கட்டுவதற்கு 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் செலவு செய்து, நகரத்தின் உள்ளே மிக வசதியாக இருந்த கட்டிடத்தை வெறும் “கடலைக்கு” விற்றிருக்கிறார். மோசமான ஒப்பந்தம். அதை நான் ரிப்பன் வெட்டித் திறக்க வேண்டுமா? முடியாது” என்று டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.