Home நாடு “ஆயர் ஹீத்தாமைத் தக்க வைப்பேன்” – வீ கா சியோங் நம்பிக்கை!

“ஆயர் ஹீத்தாமைத் தக்க வைப்பேன்” – வீ கா சியோங் நம்பிக்கை!

920
0
SHARE
Ad

WeeKaSiongMCA1610-620x320கோலாலம்பூர் – எதிர்கட்சியைச் சேர்ந்த ஜசெகவோ, அமனாவோ எந்தக் கட்சிப் போட்டியிட்டாலும், கடந்த மூன்று தேர்தல்களாகத் தான் தொடர்ந்து வெற்றியடைந்து வரும் ஆயர் ஹீத்தாம் தொகுதியை யாராலும் தன்னிடமிருந்து பிரிக்க முடியாது என மசீச துணைத் தலைவர் வீ கா சியோங் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

“நான் கவலைப்படவில்லை. அது ஜசெகவோ அல்லது அமனாவோ எந்த ஒரு சவாலாக இருந்தாலும் நான் சந்திக்கத் தயார். என்னுடைய சேவை மற்றும் தேசிய முன்னணியின் ஆதரவின் அடிப்படையில் நான் எனது தொகுதியைத் தக்க வைப்பேன்” என வீ கா சியோங் எஃப்எம்டியிடம் கூறியிருக்கிறார்.