Home வணிகம்/தொழில் நுட்பம் முஸ்லிம் யாத்ரீகர்கள் செல்லும் விமானங்கள்: பெரிய பங்கை அடைய மாஸ் திட்டம்!

முஸ்லிம் யாத்ரீகர்கள் செல்லும் விமானங்கள்: பெரிய பங்கை அடைய மாஸ் திட்டம்!

1037
0
SHARE
Ad

Izham - Ismail - mas - ceoகோலாலம்பூர் – சவுதி அரேபியாவிற்கு இஸ்லாம் யாத்ரீகர்கள் செல்லும் பட்டய விமானங்களில் 10 விழுக்காடு சந்தைப் பங்கை அடைய மலேசியா ஏர்லைன்ஸ் பெர்ஹாட் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

இதற்காக இந்த ஆண்டு அக்டோபர் மாதம், மறுகட்டமைப்பு செய்யப்பட்ட ஏ380 இரக விமானங்களை புதிதாக அறிமுகம் செய்யவும் தயாராகி வருகின்றது.

“இந்த வட்டாரத்தில் இருந்து ஆண்டுக்குச் சுமார் 1 மில்லியன் யாத்ரீகர்கள் ஹஜ் மற்றும் உம்ரா பயணத்தை மேற்கொள்கின்றனர். மலேசியா ஏர்லைன்ஸ் ஏற்கனவே சந்தையில் 6 விழுக்காடு பங்கை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. தற்போது 10 விழுக்காட்டை அடையத் திட்டமிட்டிருக்கிறோம். 2018-ல் 100 விமானங்கள் வரை இயக்குவதற்கான நிலையை அடைந்திருக்கிறோம்” என மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயலதிகாரி கேப்டன் இசாம் இஸ்மாயில் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice