Home வணிகம்/தொழில் நுட்பம் சிங்கப்பூர் தனியார் வங்கி விழாவில் உரையாற்றுகிறார் ஒபாமா!

சிங்கப்பூர் தனியார் வங்கி விழாவில் உரையாற்றுகிறார் ஒபாமா!

1313
0
SHARE
Ad

President Obama on leaving the White Houseசிங்கப்பூர் – வரும் மார்ச் மாதம் சிங்கப்பூர் வங்கி ஏற்பாடு செய்திருக்கும் விழா ஒன்றில் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கலந்து கொண்டு உரையாற்றவிருக்கிறார்.

அமெரிக்காவின் 44-வது அதிபராகப் பதவி வகித்த ஒபாமா, கடந்த ஜனவரி மாதம் அப்பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், சிங்கப்பூருக்கு, ஒபாமா முதல் முறையாக வருகை புரிவதோடு, உலகப் பொருளாதாரம் குறித்தும், அதில் ஆசியாவின் பங்களிப்பு குறித்தும் உரையாற்றவிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இத்தகவலை சிங்கப்பூர் வங்கியின் தலைமைச் செயலதிகாரி பாஹ்ரென் ஷாரி வெளியிட்டிருக்கிறார்.

இவ்விழாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட 1,000 வாடிக்கையாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டவர்கள் முன்பு ஒபாமா உரையாற்றுவார் என்றும் பாஹ்ரென் ஷாரி குறிப்பிட்டிருக்கிறார்.