Home நாடு லீ சோங் வெய் புகார்: ஆபாச காணொளி குறித்து காவல்துறை விசாரணை!

லீ சோங் வெய் புகார்: ஆபாச காணொளி குறித்து காவல்துறை விசாரணை!

1040
0
SHARE
Ad

Olympics-badminton-lee chong wei-கோலாலம்பூர் – இணையத்தில் தனது பெயரில் பரப்பப்பட்டு வரும் ஆபாச காணொளி குறித்து உலகப்புகழ் பெற்ற மலேசிய பூப்பந்து விளையாட்டு வீரர் டத்தோ லீ சோங் வெய் கூட்டரசு வர்த்தக குற்ற விசாரணைப் பிரிவிடம் நேற்று செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார்.

இதனையடுத்து அந்தக் காணொளி குறித்து காவல்துறை இன்று விசாரணையைத் துவக்கியிருக்கிறது.

“நாங்கள் இந்த விவகாரத்தில் தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து, பிணைய வசதிகளைத் தவறாகப் பயன்படுத்தியிருப்பதன் அடிப்படையில், விசாரணை நடத்தி வருகின்றோம்” என கூட்டரசு வர்த்தக குற்ற விசாரணைப் பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ அமர் சிங் இன்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.