Home உலகம் பணிப்பெண் மரணத்தில் நீதி வேண்டும் – மலேசியாவுக்கு இந்தோனிசியா கோரிக்கை!

பணிப்பெண் மரணத்தில் நீதி வேண்டும் – மலேசியாவுக்கு இந்தோனிசியா கோரிக்கை!

903
0
SHARE
Ad

Indonesianmaidabuseஜகார்த்தா – பினாங்கில் தனது முதலாளிகளால் பல நாட்களாகக் கொடுமைப்படுத்தப்பட்ட இந்தோனிசியாவைச் சேர்ந்த பணிப்பெண் அடலினா லிசாவ் (26), கடந்த ஞாயிற்றுக்கிழமை புக்கிட் மெர்த்தாஜாம் மருத்துவமனையில் மரணமடைந்தார்.

இந்நிலையில், அடலினா மரணம் தொடர்பாக, அவரது முதலாளிகளான அண்ணன், தங்கை மற்றும் அவர்களது தாயார் ஆகிய மூவரையும் காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், இந்தோனிசியாவிற்கு வருத்தம் தெரிவித்துக் கடிதம் எழுதினார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அடலினாவின் மரணத்தில் நீதி வேண்டும் என்று கூறி இந்தோனிசிய அரசாங்கம் மலேசியாவுக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறது.

“மலேசியாவிலுள்ள இந்தோனிசிய தூதரகம் மற்றும் பினாங்கிலுள்ள இந்தோனிசிய துணை தூதரகம் ஆகியவற்றுடன் தாங்கள் கலந்தாலோசித்து வருகின்றோம். இந்த விவகாரத்தில் மலேசியா முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனை வாங்கித் தருவதோடு, இறந்தவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என இந்தோனிசிய வெளியுறவு அமைச்சர் ரெட்நோ மர்சூதி தெரிவித்திருக்கிறார்.

அடலினா தனது முதலாளிகளால் பல மாதங்களாக உடல்ரீதியாக, மனரீதியாகக் கொடுமைப்படுத்தப்பட்டதோடு, கார் நிறுத்துமிடத்தில், நாய் கட்டப்பட்டிருக்கும் அருகே படுத்து உறங்க வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.