Home நாடு “அம்னோவின் அடிமையாக இருக்காதீர்கள்” – மசீசவிற்கு அன்வார் பதிலடி

“அம்னோவின் அடிமையாக இருக்காதீர்கள்” – மசீசவிற்கு அன்வார் பதிலடி

575
0
SHARE
Ad

Anwar-Ibrahim_1568721cகோலாலம்பூர், பிப் 15 – அம்னோவின் அடிமையாக மசீச கட்சி மாறிவிடக்கூடாது. மாறாக சீன சமுதாயத்திற்காக குரல் எழுப்பும் தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

நேற்று இரவு காஜாங்கில் நடைபெற்ற சீன புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட அன்வார், 1987 ஆம் ஆண்டு ஏற்பட்ட ‘ஓப்ஸ் லாலாங்’ நிகழ்விற்கு தன்னை காரணம் கூறிய மசீச தலைவர் லீயாவ் தியாங் லாய்க்கு இவ்வாறு பதிலடி கொடுத்தார்.

மேலும், பிரதமர் நஜிப் துன் ரசாக் மற்றும் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் ஆகியோரை விமர்சிக்கும் தைரியம் லியாவிற்கு இல்லை என்றும் அன்வார் இப்ராகிம் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“அந்த சமயத்தில் யார் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர்? மகாதீர். அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் யார்? நஜிப். இவர்கள் இருவரையும் குற்றம் சாட்டும் தைரியம் லியாவிற்கு உள்ளதா? இல்லை” என்று அன

கடந்த 1987 ஆம் ஆண்டு, இன புரட்சி ஏற்பட்டு மலேசிய காவல்துறை ‘ஓப்ஸ் லாலா’ நடவடிக்கையின் படி, 106 பேரை உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் படி கைது செய்தது குறிப்பிடத்தக்கது.