Home வாழ் நலம் அர்த்த சர்வாங்காசனம்

அர்த்த சர்வாங்காசனம்

656
0
SHARE
Ad
a9673ef9-4d43-49f2-ace4-42da88c5a949_S_secvpfபிப்19-விரிப்பின் மேல் நோக்கியவாறு (மல்லாந்து) படுத்து கை, கால்களைத் தளர்ந்த நிலையில் வைக்கவும், பின் கால்களை முட்டிவரை மடக்கி, இடுப்பை உயரத்தூக்கி (மேல்நோக்கி) கைகளால் இடுப்பைத் தாங்கி பிடித்து கொள்ளவும்.இரு முட்டிக் கால்களை நெற்றியருகே இருக்கும்படி கொண்டு வரவும். பாதங்கள் மேல் நோக்கி இருக்க வேண்டும். இந்த நிலையில் 10 விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். மூன்று முறை மட்டும் செய்தால் போதுமானது.கர்ப்பப்பையில் ஏற்படும் சிறு சிறு ரத்தக்கட்டிகள் மறையும், நச்சு ரத்தம் தேங்கிவிடாமல் வெளியேறும். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் சூதகவலி ஏற்படாதிருக்கும். அதிக உதிரப்போக்கு, உண்டாகாமலும், காலந்தவறாத மாதவிடாய் ஏற்படும்.
அனைத்து குடல் உபாதைகள் நீங்குவதோடு, குடலிறக்க நோயும் வராதிருக்கும். இது பெண்களுக்குரிய முக்கியமான ஆசனமாகும்.