Home இந்தியா ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி ராஜினாமா!

ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி ராஜினாமா!

508
0
SHARE
Ad

Tamil_Daily_News_53261530400ஐதராபாத் ,பிப் 19 -ஆந்திர முதலமைச்சர் பதவியை கிரண்குமார் ரெட்டி ராஜினாமா செய்துள்ளார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள அவர், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக கிரண்குமார் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார்.

தெலுங்கானாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் இந்த ராஜினாமா முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், முக்கிய முடிவுகள் எடுக்கும் போது அமைச்சரவை கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.