Home கலை உலகம் ‘சாஹசம்’ படத்திற்காக 18 கிலோ எடை குறைத்த பிரஷாந்த்!

‘சாஹசம்’ படத்திற்காக 18 கிலோ எடை குறைத்த பிரஷாந்த்!

778
0
SHARE
Ad

Untitled-1சென்னை, பிப் 19 – ஸ்டார் மூவிஸ் தயாரிப்பில், அருண் ராஜ் வர்மா இயக்கத்தில், நடிகர் பிரஷாந்த் நடிக்கும் புதிய படம் ‘சாஹசம்’.

மிகப் பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்படும் இப்படத்திற்காக, பிரஷாந்த் கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டில் ஈடுபட்டு, தனது உடல் எடையில் 18 கிலோ வரை குறைத்து கட்டுடலோடு காட்சியளிக்கிறார்.

பிரஷாந்தின் இந்த புதிய தோற்றம் அவரது ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் வலைத்தளம் மூலமாக ரசிகர்களுடன் நேரடியாக கலந்துரையாடியும் வருகின்றார்.

#TamilSchoolmychoice

இந்த புதிய படம் பிரஷாந்தின் சினிமா வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்பு முனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.