Home இந்தியா தேர்தல் நேரத்தில் ரஜினிகாந்த் மோடியை ஆதரிப்பார்- இல. கணேசன்

தேர்தல் நேரத்தில் ரஜினிகாந்த் மோடியை ஆதரிப்பார்- இல. கணேசன்

656
0
SHARE
Ad

20-rajini-modi3443-300-jpgசென்னை, பிப் 20 – தேர்தல் நேரத்தில் ரஜினிகாந்த் மோடிக்கு ஆதரவளிப்பார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

கடந்த 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தார். அதில் இருந்து ஒவ்வொரு தேர்தல் நேரத்தில் அவரது ஆதரவு யாருக்கு என்ற கேள்வி எழுந்து வருகிறது.

இந்நிலையில் இந்த தேர்தலில் ரஜினியின் ஆதரவு பாஜகவுக்கு கிடைக்கும் என்று பேச்சு அடிபடுகிறது. இது குறித்து பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கூறுகையில், ரஜினிகாந்த் அனைவருக்கும் பொதுவான மனிதர்.

#TamilSchoolmychoice

அவரை பிரச்சனைக்கு உட்படுத்த நான் விரும்பவில்லை. ஆனால் தேர்தல் நேரத்தில் அவர் மோடிக்கு ஆதரவு அளிப்பார் என்று நம்புகிறோம். ரஜினிக்கு நாட்டு நலனில் அக்கறை உண்டு.

அதனால் அவர் தேர்தல் நேரத்தில் இந்த முடிவை எடுப்பார். இது குறித்து நாங்கள் அவரை இதுவரை அணுகவில்லை.

அதற்கான நேரம் இது அல்ல. நேரம் வரும்போது அவரிடம் ஆதரவு கேட்போம் என்றார் பாஜக மூத்த தலைவர் இல. கணேசன்