Home வணிகம்/தொழில் நுட்பம் மலேசியாவின் 20 பணக்காரர்களில் இரண்டாவது நிலையில் இன்னும் ஆனந்த கிருஷ்ணன்!

மலேசியாவின் 20 பணக்காரர்களில் இரண்டாவது நிலையில் இன்னும் ஆனந்த கிருஷ்ணன்!

631
0
SHARE
Ad

Ananda Krishnan 440 x 215பிப்ரவரி 20 – மலேசியாவின் மிகப் பெரிய முதல் 20 பணக்காரர்களில் இன்னும் இரண்டாவது நிலையில் ஆனந்த கிருஷ்ணனே நீடிக்கின்றார். இந்த 20 பணக்காரர்களில் அவர் ஒருவர்தான் இந்தியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

முதல் நிலையில் ஹாங்காங்கில் வசிக்கும் மலேசியரான ரோபர்ட் குவோக் திகழ்கின்றார். 54.48 பில்லியன் மலேசிய ரிங்கிட் சொத்து மதிப்புடன் திகழும் அவரது சொத்து கடந்த ஆண்டில் 46.1 பில்லியனாக இருந்தது.

இரண்டாவது நிலையில் இருக்கும் ஆனந்த கிருஷ்ணன், 33.19 பில்லியன் மலேசிய ரிங்கிட் சொத்து மதிப்பைக் கொண்டிருக்கின்றார். கடந்த ஆண்டில் இவரது சொத்து மதிப்பு 32.90 பில்லியனாக இருந்தது.

2004ஆம் ஆண்டு முதல் தனது இரண்டாவது பணக்காரர் நிலையை ஆனந்த கிருஷ்ணன் தக்க வைத்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.உசாஹா தெகாஸ் (Usaha Tegas Sdn Bhd) என்ற தனது நிறுவனத்தின் மூலமாக, மேக்சிஸ், ஆஸ்ட்ரோ உள்ளிட்ட பல தொழில்களை ஆனந்த கிருஷ்ணன் மலேசியாவில் கொண்டிருக்கின்றார். இந்தியா போன்ற மற்ற உலக நாடுகளிலும் இவரது தொழில் சாம்ராஜ்யம் விரிந்து பரந்து கிடக்கின்றது.

மூன்றாவது பெரிய பணக்காரராக பப்ளிக் வங்கியின் உரிமையாளரான தே ஹோங் பியாவ் திகழ்கின்றார்.

இந்த பணக்காரர்களின் பட்டியலை மலேசியாவின் பிரபல ஆங்கில வணிகப் பத்திரிக்கையான மலேசியன் பிசினஸ் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.