Home கலை உலகம் இளம் கதாநாயகர்களின் சம்பளம் கேட்டு ஓடும் தயாரிப்பாளர்கள்

இளம் கதாநாயகர்களின் சம்பளம் கேட்டு ஓடும் தயாரிப்பாளர்கள்

465
0
SHARE
Ad

kedi-billa-killadi-ranga_136385897820சென்னை, பிப் 21 – இளம் ஹீரோக்கள் கேட்கும் சம்பளத்தை கொடுக்க முடியாமல் தயாரிப்பாளர்கள் ஓட்டம் பிடிக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் இப்போது இளம் ஹீரோக்களின் டிரண்ட் ஓடிக்கொண்டிருக்கிறது. காமெடி கலந்த காதல் கதைகளில் இளம் ஹீரோக்கள் நடித்து அந்த படங்கள் வெற்றி பெறுகின்றன.

சில கோடிகளில் எடுக்கப்படும் அந்த படங்கள் பல கோடிகளை சம்பாதிக்கிறது. விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், விமல் உள்ளிட்ட இளம் ஹீரோக்கள் நடிக்கும் படங்களுக்கு நல்ல மவுசு உள்ளது. இதனால் அவர்களும் இப்போது கோடிகளில் சம்பளம் பெறுகின்றனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் டாப் ஹீரோக்களின் ரேஞ்சுக்கு சம்பளத்தை உயர்த்தி கேட்க சில இளம் ஹீரோக்கள் தயாராகியுள்ளனர். முதலில் விமலை பற்றி இதுபோல் சர்ச்சை எழுந்தது.

ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு விதமாகவும் பல கோடியும் சம்பளம் கேட்கிறார் என கூறப்பட்டது. இப்போது விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோரும் அதிக சம்பளம் கேட்பதாகவும் அது முன்னணி ஹீரோக்களுக்கான சம்பளமாக இருப்பதாகவும் தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்கள்.

இதனால் பல வாய்ப்புகளை அவர்கள் இழந்து வருகிறார்கள். இதையடுத்து அவர்களின் வாய்ப்பு புதுமுகங்களுக்கு செல்கிறது. சில லட்சங்களை மட்டுமே கொடுத்து புதுமுகங்களை அறிமுகம் செய்வதே நல்லது என தயாரிப்பாளர்கள் முடிவு எடுத்துள்ளனர்.