அம்னோ தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இதற்கான அறிவிப்பை முகதீன் வெளியிட்டார்.
சியூ மெய் பன் முன்னாள் துணை அமைச்சர் மற்றும் பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.
சியூ மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தவர் என்பதோடு, அரசாங்கத்தில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு, சுவா சொய் லெக் மசீச தலைவரான போது, செக்ஸ் விவகாரத்தில் சிக்கிய அவருடன் பணியாற்ற இயலாது என்று கூறி, மசீச மகளிர் தலைவி மற்றும் பெண்கள், குடும்பம் மற்றும் சமுதாயம் துறையின் துணையமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னர் சுவா தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றவுடன், மீண்டும் மசீச உதவித் தலைவராக கடந்த வருடம் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.