Home இந்தியா மீண்டும் பாஜகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை- விரைவில் கூட்டணி அறிவிப்பு!

மீண்டும் பாஜகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை- விரைவில் கூட்டணி அறிவிப்பு!

584
0
SHARE
Ad

22-pon-radhakrishnan-vijayakanth8-600சென்னை, பிப் 22 –  நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தேமுதிகவும் பாமகவும் இடம்பெறுவது உறுதியாகி இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக 3-ஆவது அணி அமைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

இதற்காக தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியது. தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மைத்துனர் எல்.கே. சுதீஷ் ஆகியோரை பாஜக தலைவர்கள் முரளிதரராவ், பொன். ராதாகிருஷ்ணன், இல. கணேசன், எஸ். மோகன்ராஜுலு ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

இதனிடையே பாஜக அணியில் மதிமுக, இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, புதிய நீதிக் கட்சி ஆகியவை இணைந்ததாக அறிவிக்கப்பட்டன.  ஆனால், கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்படவே, மோடி பங்கேற்ற வண்டலூர் பொதுக்கூட்டத்தில் வைகோ கலந்து கொள்ளவில்லை.

#TamilSchoolmychoice

இந்நிலையில் திடீரென டெல்லி சென்ற விஜயகாந்த், பிரதமரைச் சந்தித்து மனு கொடுத்தார். இதனால் காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக இணையப் போகிறது என்று செய்திகள் வெளியாகின.

ஆனால் காங்கிரஸ் தலைவர்கள், விஜயகாந்தை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. அத்துடன் பாஜக- தேமுதிக பேச்சுவார்த்தை கிடப்பில் போடப்பட்டிருந்தது.  இந்த நிலையில் 7 தமிழரை விடுதலை செய்யும் முடிவுக்கு காங்கிரஸ் கட்சி மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்திற்குச் சென்றுளது.

இப்படி ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்ப்பையுமே சம்பாதித்து வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியே வேண்டாம் என்று தேமுதிக உறுதியான முடிவெடுத்தது. இதனால் மீண்டும் பாஜக – தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மாநிலப் பொதுச்செயலாளர் எஸ். மோகன்ராஜுலு ஆகியோர் சுதீஷுடன் கடந்த இரு நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறனர்.

ஆனால் தேமுதிக 20 தொகுதிகள் கேட்டு பிடிவாதமாக உள்ளது. பாமகவும் 10 தொகுதிகளை கேட்டு பிடிவாதமாகவுள்ளது. மதிமுகவோ 9 தொகுதிகளை கேட்கிறது.

இதனால் தொகுதிப் பங்கீடு இழுபறி நீடித்து வருகிறது.இருப்பினும் இந்த இழுபறிக்கு விரைவில் தீர்வு காணப்பட்டு பாஜக- தேமுதிக- பாமக- மதிமுக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.