Home கலை உலகம் ரஜினிக்கு எந்திரன் 2, கமலுக்கு இந்தியன் 2-தயாராகிறார் ஷங்கர்?

ரஜினிக்கு எந்திரன் 2, கமலுக்கு இந்தியன் 2-தயாராகிறார் ஷங்கர்?

546
0
SHARE
Ad

Rajini-Kamal-At-Vaali-Aayiram-Book-Launch-33சென்னை, பிப் 24 – ரஜினி நடித்த எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் கமல் நடித்த இந்தியன் படத்தின் அடுத்த பாகத்தை இயக்குநர் ஷங்கர் உருவாக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கமல் இரட்டை வேடத்தில் நடித்த படம் ஷங்கரின் இந்தியன். 1996-ல் பெரும் பட்ஜெட்டில் உருவானது. அன்றைக்கு ரூ 12 கோடி செலவு செய்யப்பட்டது. அன்றைய தேதிக்கு இது மிகப் பெரிய பட்ஜெட்.

பெரிய வெற்றி பெற்ற இந்தப் படம் ரூ 30 கோடி வசூலைக் குவித்தது. தேசிய விருதுகளும் கிடைத்தன.

#TamilSchoolmychoice

சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ஷங்கர் இயக்கிய இரண்டாவது படம் எந்திரன். ரூ 140 கோடி செலவில் உருவான மெகா படம் இது. 2010-ல் வெளியான இந்தப் படம் இந்திய சினிமா வரலாற்றைப் புரட்டிப் போட்டது. உலகம் முழுக்க ரூ 375 கோடிகளைக் குவித்தது இந்தப் படம்.

இந்த இரு படங்களின் இரண்டாம் பாகங்களையும் உருவாக்குவதில் முனைப்பு காட்டுகிறார் இயக்குநர் ஷங்கர். எந்திரன் 2 படத்துக்கான கதை முன்பே தயாராகிவிட்டது.

இந்தப் படத்துக்கான ஷூட்டிங்கைத் தொடங்க தயாராக இருப்பதாக எந்திரனுக்கு ஒளிப்பதிவு செய்த ரத்னவேல் ஏற்கெனவே கூறியது நினைவிருக்கலாம். ரஜினி உடல் நிலை காரணமாக அந்தக் கதையை தள்ளி வைத்துவிட்டு, ஐ படத்துக்குப் போய்விட்டார் ஷங்கர்.

ஐ படம் முடிந்ததும் முதலில் எந்திரன் படத்தின் 2-ம் பாகத்துக்கான பட வேலைகளை முழு வீச்சில் துவங்கவிருக்கிறார் ஷங்கர். கோச்சடையான் படத்தை முடித்து விட்டு ரஜினி ஓய்வில் இருக்கிறார்.

அடுத்த படத்துக்கான கதையை அவர் இன்னும் முடிவு செய்யவில்லை.ஆனால் ஷங்கரை சந்தித்து கதை கேட்டுள்ளார். ஷங்கர் ஐ வேலைகளை முடித்ததுமே ரஜினி நடிக்கும் புதுப்பட அறிவிப்பு வரும் எனத் தெரிகிறது.