Home இந்தியா ஆந்திராவில் அதிபர் ஆட்சி? மத்திய அமைச்சரவை இன்று முடிவு!

ஆந்திராவில் அதிபர் ஆட்சி? மத்திய அமைச்சரவை இன்று முடிவு!

517
0
SHARE
Ad

Tamil-Daily-News_80747187138ஐதராபாத், பிப் 24 – ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியின் ராஜினாமாவைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதா அல்லது முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரை தேர்வு செய்வதா என்ற குழப்பம் நீடிக்கிறது.இது குறித்து முடிவு செய்ய மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

ஆந்திராவை பிரித்து தெலங்கானா மாநிலத்தை அமைக்கக் கூடாது என்று போராடிய சீமாந்திர பகுதி காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களான, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி உள்ளிட்டோர், தெலங்கானா மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டனர்.

முதல்வர் கிரண் குமார், மற்ற எம்எல்ஏக்களின் ராஜினாமாவுக்கு பிறகு மாநிலத்தில் அரசியல் தன்மை இல்லாத நிலை உருவாகியுள்ளது.

#TamilSchoolmychoice

மாநில பிரிவினையில் எல்லா கட்சிகளிலும் ஆதரவு, எதிர்ப்பு நிலை இருந்ததால், எந்த கட்சியும் உறுதியான முடிவு எதையும் எடுக்க முடியாமல் தடுமாறி வந்தது. இந்நிலையில், முதல்வர் பதவியை கிரண்குமார் ராஜினாமா செய்ததால், மாநிலத்தில் நிலவும் நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு ஆளுநர் நரசிம்மன் விரிவான அறிக்கை அனுப்பியுள்ளார்.

ஆந்திராவில் அதிபர் ஆட்சியை அமல்படுத்தவே மத்திய அரசு விரும்பியது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறும்போது, அதன் ஒப்புதலைப் பெறாமல் மாநிலத்தில் அதிபர் ஆட்சியை அமைக்க முடியாது என்பதால் ஒத்திவைத்த பின்னர் அமல்படுத்தலாம் என்று சட்டத் துறை கருத்து தெரிவித்தது.

இதையடுத்து, கிரண்குமார் ரெட்டி ராஜினாமா செய்ததும் உடனடியாக மாநிலத்தில் அதிபர் ஆட்சியை அமல்படுத்தும் முயற்சியை மத்திய அரசு தள்ளிவைத்தது என்றும் கூறப்படுகிறது.

ஆளுநர் அறிக்கை குறித்து முடிவு செய்வதற்காக மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் தெலங்கானா மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பிறகு ஆந்திராவில் நிலவும் நிலவரம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

மாநிலத்தில் அதிபர் ஆட்சியை அமல்படுத்த வேண்டாம், தேர்தல் வரையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அமைக்க வேண்டும். தேவைப்பட்டால் மாநில சட்டப்பேரவையின் பதவி காலத்தை மேலும் 6 மாதங்கள் நீடிக்கலாம் என்றும் கட்சி மேலிடத்திடம் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.