Home நாடு பக்காத்தான் ஆதரவு பேஸ்புக் பக்கங்கள் மலேசியாவில் முடக்கம்?

பக்காத்தான் ஆதரவு பேஸ்புக் பக்கங்கள் மலேசியாவில் முடக்கம்?

618
0
SHARE
Ad

c5d20c4357c9475fc0e654ddb69558dfபெட்டாலிங் ஜெயா, பிப் 24 – காஜாங் இடைத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நேற்று பக்காத்தான் ராக்யாட்டின் ஆதரவு பேஸ்புக் வலைத்தளங்கள் அனைத்தும் மலேசியாவில் மட்டும் முடக்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இது குறித்து மலேசியா கினி இணையத்தளத்திற்கு பக்காத்தான் ஆதரவாளர்கள் அளித்துள்ள செய்தியில், தங்களால் பக்காத்தான் ஆதரவு பக்கங்களான ‘We fully support PKR – DAP’ மற்றும் ‘zhong zheng kuai xun’ போன்ற பேஸ்புக் பக்கங்களை திறக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

பேராக் மாநில ஜசெக பொருளாதாரப் பிரிவுத் தலைவர் சோங் ஸெமின் கூறுகையில், “இந்த பேஸ்புக் பக்கங்கள் மலேசியாவில் மட்டும் தான் முடக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் உள்ள பக்காத்தான் ஆதரவாளர்களால் அதை திறக்க முடிகின்றது. அண்டை நாடான சிங்கப்பூரில் கூட அதை பார்க்க முடிகிறது” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இடைத்தேர்தல் காரணமாக தான் இந்த பேஸ்புக் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதாக பக்காத்தான் ஆதரவாளர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.