Home இந்தியா எழுத்தாளர் ஜெயகாந்தன் கவலைக்கிடம்! மருத்துவமனையில் அனுமதி!

எழுத்தாளர் ஜெயகாந்தன் கவலைக்கிடம்! மருத்துவமனையில் அனுமதி!

589
0
SHARE
Ad

ilayaraja-jayakanthanசென்னை, பிப் 24 – ஞானபீட விருது பெற்ற பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல் நலக்குறைவு காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலக்கிய உலகில் ஜே.கே என்று அழைக்கப் படும் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன்(83),  கே.கே. நகரில் வசித்து வருகிறார்.

வயது முதிர்வு காரணமாக மூன்று மாத காலமாக உடல் நலம் சரியில்லாமல் வீட்டில் இருந்தபடியே  சிகிச்சை பெற்று வந்தார்.

#TamilSchoolmychoice

நேற்று மதியம் அவருக்கு திடீரென நினைவு தப்பியது.  இதையடுத்து உடனடியாக வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆபத்தான நிலையில் இருந்த ஜெயகாந்தன் தீவிர சிகிச்சைக்கு பிறகு சிறிதளவு உடல் நலம் தேறினார். எனினும் 24 மணி நேரம் அவர் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.